Sunday, May 18, 2014

29 வயது தாயாருக்கு பிரசவம் பார்த்த 8 வயது சிறுமி. வியப்பூட்டும் வீடியோ

29 வயது தாயாருக்கு பிரசவம் பார்த்த 8 வயது சிறுமி. வியப்பூட்டும் வீடியோ


அமெரிக்காவில் 29 வயது தாய் ஒருவர் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு மிகவும் துணிச்சலாக அவரது 8 வயது சிறுமி பிரசவம் பார்த்த சம்பவம் ஒன்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் புளோரிடோ மாகாணத்தை சேர்ந்த  Tampa Bay என்ற இடத்தில் Krystle Garcia என்ற 29 வயது பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்துக்கொண்டிருந்த Krystle Garcia, தனது 8 வயது மகளை அழைத்து உடனே 911 க்கு தகவல் கொடுக்கும்படி கூறினார்.

மிகவும் துணிச்சலான சிறுமியான 8 வயது  Jazmine McEnaney, உடனே தொலைபேசியை எடுத்து 911க்கு போன் செய்து தனது தாயாருக்கு பிரசவ வலி ஏற்பட்டிருப்பதாக கூறினார். அந்த சமயத்தில் தனது தாய்க்கு பனிக்குடம் உடைந்து குழந்தை வெளியே வரத்தொடங்கிவிட்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் வலியால் துடித்துக்கொண்டிருந்த தாய்க்கு ஆறுதல் கூறி, தலை மட்டும் வெளியே வந்த குழந்தையை வெளியே மிக ஜாக்கிரதையாக எடுத்தார். 

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸுடன் வந்த 911 குழுவினர் தாயையும், குழந்தையையும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். தற்போது தாயும் குழந்தையும் நலமாக உள்ளனர்.

இக்கட்டான நிலையிலும், பதட்டப்படாமல் துணிச்சலாக செயல்பட்ட 8 வயது  Jazmine McEnaney, என்ற சிறுமியை அனைவரும் பாராட்டினர்.

Like Us on Facebook to watch the best videos daily

 

Copyright @ 2013 newmanithan.